IPBShyju.com

Welcome Guest ( Log In | Register )

 
Reply to this topicStart new topic
> Amma Kavithaikal, tamil kavitai
sivakumar
post Aug 29 2008, 06:15 AM
Post #1


Just Popping In
Group Icon
**

Group: Members
Posts: 8
Joined: 25-August 08
From: paris
Member No.: 24,732


Country :




- நிலா -

புதிதல்ல எனக்கு..!
அதிகாலைத் தென்றலும்
வைகறை நிலவும் -
என்னிலும் - என் கவிதைகளிலும்
கலந்து விட்ட ஒன்று.

நட்சத்திர கிறுக்கல்களிடையே
ஒரு கவிதைச் சுடரென ஒளி வீசும்
நிலவின் அழகில் - ஏனோ
களவு போனது என் மனம்.

கவிஞர்களே..!
நிலவைப் பெண்ணோடு
ஒப்பிடாதீர்கள் இனியும்.

வான வீதிகளில்
நட்சத்திரப் பூக்களிடையே
உலா வரும் - என்
நிலா தேவதைக்கு
நிகரில்லை எப்பெண்ணும் !

அன்றும் அப்படித்தான்

இரவு பகலிடம்
விடை பெற்று செல்லும்
ஓர் இளங்காலைப் பொழுது -

குல்மொஹரும் போகன்வில்லாவும்
பூக்களிறைத்த சாலையில் -
நான் தனித்திருந்த நிமிடங்கள்...

மேகங்களுக்கு பின் ஒளிந்து
நட்சத்திரத் தோழிகளோடு
கண்ணாமூச்சி ஆடிய நிலவை
நான் ரசித்திருந்த கணங்கள்...

அப்போதுதான் அது நிகழ்ந்தது

சாலையின் இன்னொரு விளிம்பில்
ஒரு மின்னலென உதித்தாள் -
அவள்..!

இருள் நீங்கா அக்காலைப் பொழுதில்
பௌர்ணமி நிலவென ஒளிர்ந்தது -
அவளின் பளிங்கு முகம்.

வெண்மேகமாய் சூழ்ந்திருந்த
ஆடைகளுக்குள் - வெகு அழகாய்
சிக்கியிருந்தாள் அவள்.

அன்றலர்ந்த மல்லிகை மலர்கள்
நட்சத்திர சரங்களாய் - அவளின்
கூந்தல் அலங்கரித்தன..!

வழி தவறி பூமி வந்து விட்ட
வானுலக தேவதையாய்த்
தோன்றினாள் அவள்.

பனியிதழ்களில் பூத்திருந்த
புன்னகைப் பூ -
மெளனமாய் கவிதை பேசிய
ஈர விழிகள்

கற்பனைகள் கொடுக்கும்
அவளின் இளமை -
ஆளுமை செய்யும் அவளின்
நளினத் தோற்றம் -

இவை பார்க்கையில் - அவளை
எப்போதோ பார்த்ததாய்...
எப்போதும் பார்ப்பதாய் - ஏனோ
என்னில் ஒரு தோற்றம்.

'உன் தேவதை இவள்தான்..
இவளேதான்’ என்றது...
இதயத்திலிருந்து ஒரு கூக்குரல்!

உடற்கூட்டின் வெளியே
உயிர் துடிக்க -
நிமிடங்கள் யுகங்களாய் நகர -

கார்மேகமென நெற்றி புரண்ட
கேசத்தை - மிக
அலட்சியமாய் ஒதுக்கி

சட்டென வானம் வெட்டிப் போகும்
ஒரு மின்னற்பூவாய் அவள்
கடந்து போனாள்

இல்லை
என் இதயம்
கடத்திப் போனாள்.

அவள் என்னுள் விட்டுச் சென்ற
அடையாளங்கள் ஏராளம் -
ஆனால் நிஜங்களில் அவள்
வந்ததற்கான சுவடு ஏதுமில்லை
ஒன்றை தவிர...

தவறி விழுந்ததோ...
அல்லது
எனக்கெனத் தவற விட்டாளோ?

சிதறிய பூக்களிடையே ஒரு
ஹைக்கூ கவிதையாயக் கிடந்தது...
அவளின் கைக்குட்டை.

வெளிர் நீல கைக்குட்டையில்
வெள்ளை எழுத்துக்களால் - மிக
அழகாயப் பொறிக்கப்பட்டிருந்தது
அவளின் பெயர் -

- நிலா -

சட்டென எனக்குள் ஏதோ
பொறி தட்ட...
மிக எதேச்சையாய் நிமிர்ந்து
வானம் பார்த்தேன் -

அங்கே -
நட்சத்திரங்கள் மட்டும்
மெளனமாயக் கண் சிமிட்ட -

நிலவைக் காணவில்லை..!


 
+Quote Post  Go to the top of the page
Google Adsense
1 User(s) are reading this topic (1 Guests and 0 Anonymous Users)
0 Members:

Reply to this topicStart new topic

 

RSS Lo-Fi Version Time is now: 19th February 2018 - 03:35 PM